பிரபல இந்தி நடிகை ஜியாகானி தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணமாக இருக்கலாம் என்று மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அவரது காதலர் சூரஜ்-ஜுடனிடம் காவல்துறையினர்
விசாரனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் நேற்று இரவு 11.45 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அங்கு விரைந்த காவல்துறையினர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் ஜியாகானின் செல்போன் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்த நிலையில் போலீசார் ஜியாவின் காதலனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் மும்பை போலீஸ் தரப்பு கூறுகையில்,
கடந்த ஓராண்டு காலமாக பழகி வந்த சூரஜ்-ஜுடன் ஜியா கான் நெருக்கமாக இருந்துள்ளார். புதிய தோழியுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம் தந்த மயக்கத்தில் ஜியா கானை சூரஜ் சில நாட்களாக புறக்கணித்து வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, சமீப காலமாக புதிய பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் ஜியா கான் விரக்தியடைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 1ம் தேதி புதிய தமிழ் படம் ஒன்றில் நடிப்பதற்கான நேர்காணலுக்கு ஜியா கான் ஐதராபாத் சென்றபோது உடல் எடை அதிகமாக இருந்ததால் வாய்ப்பு கைநழுவிப் போனது.
அன்று மாலை 7 மணியளவில் மும்பை திரும்பிய அவர் இரவு 9 மணியளவில் காந்திராம் சாலையில் உள்ள சூரஜ் வீட்டிற்கு சென்று அன்றிரவை அவருடன் கழித்தார்.
மறுநாள் (ஜூன் - 2) பகல் முழுவதும் அவருடன் இருந்துவிட்டு, இரவு 9 மணியளவில் ஜுஹு பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சூரஜ்ஜுடன் சாப்பிட்டார். சூரஜ் தனது காரில் ஜியா கானை அவரது வீட்டில் இறக்கிவிட்டு சென்றார்.
மறுநாள் (ஜூன் - 3) சூரஜ்ஜுடன் 10 முறைக்கு மேல் செல்போனில் பேசி, ஏகப்பட்ட மெசேஜ்களையும் ஜியா கான் அனுப்பியுள்ளார்.
மாலை 7 மணிக்கு மீண்டும் போன் செய்து தனக்கு 3 புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக சூரஜ்ஜிடம் கூறியுள்ளார். இரவு 9 மணியளவில் புதிய படவாய்ப்புக்கு வாழ்த்து தெரிவித்த சூரஜ், தனது உதவியாளரிடம் பூச்செண்டு கொடுத்தனுப்பியுள்ளார்.
அதன்பிறகு, ஜியா கானின் செல்போன் அழைப்புகளை சூரஜ் நிராகரித்துள்ளார்.
9.15 மணிக்கு சூரஜ் தந்தனுப்பிய பூச்செண்டை வீட்டு காவலாளியிடம் தந்து அதை வெளியே வீசும்படி ஜியா கான் கூறியுள்ளார்.
9.30 மணிக்கு சூரஜ்ஜின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயற்சித்துள்ளார் ஜியா, அவரது தந்தையான ஆதித்யா பஞ்சோலியிடம் சூரஜ் மிக மும்முரமாக பேசிக்கொண்டிருப்பதாக உதவியாளர் கூறுயுள்ளார்.
10 மணியளவில் வீடு திரும்பிய ஜியா கான், 10.53க்கு மீண்டும் சூரஜ்ஜிற்கு போன் செய்து 2 நிமிடங்கள் அவருடன் பேசுயுள்ளார்.
இதே நிலை நீடித்தால் நான் லண்டனுக்கு போய் விடுவேன் என்று இரவு 11.07க்கு சூரஜ்ஜிற்கு மெசேஜ் அனுப்புகிறார்.
11.07-லிருந்து 11.22 வரை தனக்கு போன் செய்யும்படி சூரஜ் அனுப்பிய 3 மெசேஜ்களுக்கு ஜியா கான் பதில் ஏதும் அளிக்கவில்லை.
வெளியே சென்றிருந்த ஜியா கானின் தாயார் ரபியா கான் 11.23-க்கு வீட்டுக்குள் நுழைகிறார். படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் ஜியா கான் பிணமாக தொங்கும் காட்சியைக் கண்டு பதறியபடி போலீசாருக்கு தகவல் அளிக்கிறா
போலீசார் நேற்று நடத்திய விசாரணையில் ஜியா கானின் தற்கொலை மரணம் காதல் தோல்வியால்தான் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூரஜ்ஜிடம் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் போது மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக மும்பை போலீஸ் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக