புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புராதன பெறுமதிவாய்ந்த பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்தும் நடவடிக்கை தொடர்பில் தொல்பொருள் திணைக்கள பொலிஸ் பிரிவினர் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.


விமானம் மூலமான பொதிகள் மற்றும் கூரியர் சேவைகள் ஊடாக புராதன பெறுமதியுடைய பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

சுற்றுலா வழிகாட்டியாக செயற்படும், இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய, கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து புராதன பெறுமதியுடைய சிலைகள், முத்து மாலைகள், மண் அடுப்பு மற்றும் பித்தளையிலான பொருட்கள் பலவற்றையும் கைப்பற்றியுள்ளதாக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தொல்பொருள் பெறுமதிமிக்க பொருள் ஒன்றை விமானப் பொதி மூலம் அனுப்ப முற்பட்ட சந்தர்ப்பத்தில் தபால் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்தக் கடத்தல் நடவடிக்கை குறித்து தெரிய வந்ததாக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top