பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் இந்து மக்களில் பலர் தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வருவதில்லை என்று ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்து சேவா பொதுநல நிறுவனம் நடத்திய புள்ளி விவர கணக்கெடுப்பில் பாகிஸ்தான் நாட்டில் வாழ்ந்து வரும் இந்து மக்களில் பலர் தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வருவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கராச்சியில் நிருபர்களிடம் பாகிஸ்தான் இந்து சேவா பொதுநல நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்தர் கோஹ்லி கூறியதாவது:-
சிறுமிகள் கடத்தல், பலவந்த மதமாற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களது பெண் குழந்தைகளை ஆரம்ப பள்ளிகளில் கூட சேர்ப்பதில்லை.
பள்ளிக்கு அனுப்புவதைவிட வயல் வேலைகளிலோ, ஆடு, மாடு, கோழி, வாத்து போன்றவற்றை மேய்க்கும் வேலைகளிலோ சிறுமிகளை ஈடுபடுத்தவே பெற்றோர் விரும்புகின்றனர்.
சமீபத்தில் பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் நடத்திய கணக்கெடுப்பில் இங்கு இந்து மக்கள் பெரும்பாண்மையாக வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவர்கள் உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என இரு வகையாக பிரிந்துள்ளனர். உயர் சாதி இந்துக்கள் 15 சதவீதம் பேர், தாழ்த்தப்பட்ட பிற சாதியினர் மீது பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் வாழும் தலித் இந்துக்களின் 16 சதவீதம் மக்கள் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே பட்டதாரிகள். மேல்நிலை பட்டதாரிகளாக எந்த தலித்தும் இன்னும் உருவாகவில்லை.
இதுதொடர்பாக, விரைவில் பிரதமராக பதவியேற்கவுள்ள நவாஸ் ஷெரீப்பை சந்தித்து தலித் மக்களின் தாழ் நிலையை மேம்படுத்தி, முஸ்லிம் அடிப்படைவாதிகள் மற்றும் உயர்சாதி இந்துக்களிடம் இருந்து தலித் இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்கும்படி எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை எழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்து:
கருத்துரையிடுக