புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மனாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பெண் (31) ஒருவர் தன்னை மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.



அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் மனாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

இவர் இன்று காலை பேருந்துக்காக காத்துக்கொண்டிருக்கும்போது, அவ்வழியாக லாரியில் வந்த மூவர், அப்பெண்ணை அவர் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி, அழைத்து சென்றுள்ளனர்.

சிறிது தூரம் கடந்தப்பின் லாரியை காட்டுவழி பாதையில் செலுத்திய ஓட்டுனர், அங்கேயே அந்த அமெரிக்க பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தெரிகிறது. ஓட்டுனரோடு இருந்த மேலும் இருவரும் அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள மூவரையும் தேடிவருகின்றனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top