புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 67-வது லீக் போட்டி, பஞ்சாபில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் XI பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.


பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கில்கிறிஸ்ட் மற்றும் மார்ஷ் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்கள் ஜோடியில் 60 ரன்கள் எடுக்கப்பட்டது.

கில்கிறிஸ்ட் 42 ரன்னிலும், மார்ஷ் 45 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த மஹமுத் 9 ரன்னில் வெளியேறினார். பின்னர் மில்லரும் சதிசும் ஜோடி சேர்ந்து விளையாடினார்கள். மில்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும்.

இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணியின் சார்பில் நெக்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெயவர்த்தனே மற்றும் சந்த் விளையாடினார்கள். சந்த் 7 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த பதான் (1), வார்னர் (0), சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். 5-வது வீரராக சேவாக் களமிறங்கினார்.  நிதானமாக விளையாடிய சேவாக் 30 ரன்கள் எடுத்தபோது, அவானா வீசிய பந்தில் கில்கிறிஸ்ட்யிடம் கேட்ச் கொடுத்தார்.

பின்னர் ஜெயவர்த்தனேவுடன் ரொஹரர் ஜோடி சேர்ந்து விளையாடினார். ஜெயவர்த்தனே 39 ரன்னிலும், ரொஹரர் 49 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164  ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதனால் பஞ்சாப் அணி, 7 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.
 
Top