புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கடந்த 26 ஆண்டுகளாக படுக்கையை விட்டு எழுந்திருக்கக்கூட முடியாத நிலையில் வாழ்ந்துவரும் செஸ் வீரர் ஒருவர் சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டியில் பங்கு பற்றியுள்ளமை
பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சைலேஷ் நெர்லிகர் (32) என்ற செஸ் வீரரே இவ்வாறு தனது செஸ் திறமையை காட்டுவதற்காக மேற்படி போட்டியில் பங்கேற்றுள்ளார்.

ஆனால், சாதாரன வீரர்களை போல இவரால் நாற்காலியில் உட்கார முடியாது. தலையை உயர்த்த முடியாது.  இவர்  படுத்தபடியே செஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தற்போது சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி நடந்து வருகிறது. அதில் சைலேஷ் வந்திருந்தார்.

சைலேஷின் தாய் இது தொடர்பில் குறிப்பிடுகையில்,

'சைலேஷ் 6 வயது வரை ஆரோக்கியமாக இருந்தார். நன்கு ஓடியாடி விளையாடுவார். சைக்கிள் ஓட்டுவார், கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களிள் சிறப்பாக ஈடுபடுவார்.

ஆனால், 26 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கிடக்கிறார். ஒருநாள் சைலேஷிக்கு திடீரென மஞ்சள் காமாலை வந்தது. உடல் எடை படிப்படியாக குறைந்தது. கல்சியம் பற்றாக்குறை என்று கூறி வைத்தியர்கள் மருந்து, மாத்திரை கொடுத்தனர்.

அதன் பிறகு கடந்த 26 ஆண்டுகளாக சைலேஷ் படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறான். ஆனாலும் அவர் மனம் தளராமல் செஸ் விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றார்' என்று தெரிவித்தார்.
 
Top