புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா -கொடுங்கையூர், காமராஜர் சாலையை சேர்ந்தவர் தாரா, 34. இவரது கணவர் சங்கரவர்மன், 38. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.



தாரா, தமிழக காங்கிரசிலும், புதுச்சேரி மாநில காங்கிரசிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார். சங்கரவர்மனும் தமிழக காங்கிரசில் நிர்வாக பொறுப்பாளராக உள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக சங்கரவர்மன், தனது மூத்த மகளிடம் தகாத முறையில் நடந்து வந்தார். தந்தை என்பதால் அவரும் பொறுத்து கொண்டார்.

ஆனால் நாளாக நாளாக தந்தையின் தொல்லை எல்லை மீறியது. கடந்த நான்கு நாட்களுக்கு முன், தாரா வெளியூர் சென்ற நிலையில், சங்கரவர்மன், மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

தந்தையின் தொடர் அத்துமீறல்களால் அதிர்ந்து போன மகள், தாயிடம் நடந்ததை, அழுது கொண்டே தெரிவித்தார். கணவரின் நடவடிக்கையை கேட்டு அதிர்ந்த தாரா, பொலிஸ் கமிஷனரகத்துக்கு முறைப்பாட்டு மனு அனுப்பினார்.

முறைப்பாட்டு மனு புளியந்தோப்பு துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில் சங்கரவர்மனை எம்.கே.பி.நகர் பொலிசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது உறுதியானதுடன், சங்கரவர்மன் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து சங்கரவர்மன் மீது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று மாலை கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி சங்கரவர்மன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
Top