புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்காவில் மாயன் இனத்து மக்கள் நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர்.

மாயன் இனமக்கள் அந்த காலத்திலேயே பிரமீடுகள், பிரமாண்ட கட்டிடங்கள் போன்றவற்றை கட்டி வைத்தனர். பிரேசில் நாட்டில் உள்ள பெரிஸ் என்ற இடத்தில் 100 அடி உயரத்துக்கும் அதிகமான பிரேமீடு ஒன்று இருந்தது.

கடந்த 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பிரேமீடு பராமரிக்கப்படாமல் புதர்கள் வளர்ந்த நிலையில் இருந்தன.

இந்நிலையில் அந்த பகுதியில் சாலை ஒன்று அமைக்கப்படுகிறது. கட்டுமான நிறுவனம் ஒன்று இந்த சாலையை அமைத்து வருகிறது. அவர்கள் ரோடு போடுவதற்காக பிரமீடின் ஒரு பகுதியை இடித்து அதில் இருந்து மண் எடுத்து சென்றனர்.

இது குறித்த தகவல் பழங்கால பொருட்கள் பாதுகாப்பு அமைப்புக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அரசிடம் புகார் கொடுத்துள்ளனர்.

உடனடியாக அங்கு மண் எடுப்பது நிறுத்தப்பட்டது. பிரமீட்டை இடித்த கட்டுமான நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.



 
Top