புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாடசாலை செல்லும் வயது வந்த மாணவிகளில் பலர் தமக்கொரு காதலன் இருப்பதை கௌரவாமாக கருதுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரிய
வந்துள்ளது.

வெகு சிலரே காதலன் இல்லாதிருப்பதை கௌரவமாக கருதுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த உறவு நிலை அவர்களின் எதிர்காலம் தாடர்பாக கவலையளிப்பதாகவும் அதிகார சபை தெரிவிக்கின்றது. அதிகார சபைத் தலைவி சட்டத்தரணி அனோமா திசாநாயக்க இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,

நாம் அனைவரும் விளையாடும் காலத்தில் விளையாட வேண்டும். வயது வந்த பின்னர் செய்ய வேண்டியவற்றை சிறு வயதிலேயே செய்ய முற்பட்டால் வயது வந்த பருவமும் சிறுவயதுப் பருவமும் இல்லாமற் போய் விடும்.

பாடசாலை செல்லும் பருவத்தில் விசேடமாக 18 வயதுக்கு முன்னர் காதல் தொடர்பு வைத்திருப்பதால் எதிர்காலம் இருளடைந்து விடும். அத்துடன் குடும்பத்திலும் சமூகத்திலும் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதேவேளை பாடசாலை மாணவிகளில் பலர் தமது காதலர்களாலேயே பலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே பாடசாலைப் பருவம் காதலிப்பதற்கல்ல, கல்வி கற்பதற்கே. ஆதலால் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும்படி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மாணவிகளிடம் கேட்டுக் கொள்கின்றது என்றார்.
 
Top