புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நேற்று முன்தினம் 121212. உலகம் முழுக்க இந்த நாளுக்காக காத்திருந்து பலர் பல நல்ல செயல்களை செய்தனர்.ஆனால், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர், '121212 அன்று தற்கொலை செய்து கொள்வேன்’ என்று முன்கூட்டியே தெரிவித்து, சிறிது நேரம் முன்பாகவே தண்ணீர் தொட்டியில் இருந்து குதித்து தற்கொலை
செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சகர் மாவட்டத்தில் உள்ள நரோரா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணபால் (40). இவர் மரக்கன்றுகள் விற்பனை நிலையம் நடத்தி வந்தார்.

இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடவுள் விருப்பப்படி தான் கடந்த 12.12.1972ல் பிறந்ததாக கூறி வந்தார். ஆனால், பள்ளியில் தன்னை சேர்க்கும்போது 10.10.1972 என்று தேதி மாற்றி பெற்றோர் குறிப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில், பிறப்பும் இறப்பும் கடவுள் விருப்பம் என்று கூறுவதை இவர் ஏற்கவில்லை.கடவுள் விருப்பப்படி நான் 12.12.1972ல் பிறந்ததாகவே வைத்துக் கொள்வோம். ஆனால், இறப்பது என் விருப்பம். அதை கடவுள் தீர்மானிக்க முடியாது. என் விருப்பப்படி 121212ம் தேதி உயிர் விடுவேன். என்னை கடவுள் தடுக்க முடியாது' என்று கூறியுள்ளார். தனது மரணத்துக்கு நாள் குறித்த கிருஷ்ணபால், 121212ம் தேதி பிற்பகல் 12:12 மணிக்கு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக 12 பக்கத்துக்கு விரிவாக கடிதம் எழுதி வைத்தார்.

அதை பல காப்பிகள் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டார். கூடவே செங்கற்களையும் எடுத்துக் கொண்டு  நேற்று காஜியாபாத் பிரதாப் நகரில் உள்ள 80 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறி உச்சிக்கு சென்றார். கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டிக் கொண்டார். அந்த பக்கம் சென்றவர்களை அழைத்து, தான் வைத்திருந்த 12 பக்க கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பிகளை கீழே வீசினார். அதை படித்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர்.

கிருஷ்ணபாலை சமாதானம் செய்து கீழே இறங்க கூறினர். அதை அவர் ஏற்கவில்லை. இதற்கிடையில் வாலிபர்கள் சிலர் தண்ணீர் தொட்டி மீது ஏறினர். அவர்கள் மீது செங்கற்களை வீசினார். இதனால் பயந்து போய் அவர்கள் கீழே இறங்கிவிட்டனர். எனினும், பொதுமக்களும் போலீசாரும் கிருஷ்ணபாலை கீழே இறக்க தீவிர முயற்சி செய்தனர்.

இதனால் தனது எண்ணம் எங்கே நிறைவேறாமல் போய் விடுமோ என்று பதற்றமானார் கிருஷ்ணபால். 11.05 மணிக்கெல்லாம் கீழே குதித்து விட்டார். போலீஸ் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்த கிருஷ்ணபாலை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து காஜியாபாத் போலீஸ் கண்காணிப்பாளர் ஷிவ்சங்கர் சிங் யாதவ் கூறுகையில், 'கிருஷ்ணபால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்றார். 121212ம் தேதி 12:12 மணிக்கு கடவுள் விருப்பத்தை மீறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியவர் எதிர்பாராதவிதமாக முன்கூட்டியே விழுந்து இறந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top