ஒளிரும் விண்கற்களை இன்று 14ம் திகதி இரவு வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்று விண்ணியல் ஆய்வாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் துறைப் பேராசிரியருமான சந்தன ஜயரட்ன
தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 04ம் திகதி முதல் 17ம் திகதி வரையும் இலங்கையர் விண்கற்களைப் பார்க்கலாம் எனவும் 13ம், 14ம் திகதிகளில் வெற்றுக் கண்களால் தெளிவாகப் பார்க்க முடியுமென்றும் அவர் கூறினார்.
விண்கற்கள் செறிவாக இருக்கும் அண்டவெளி பாதையில் புவி பயணம் செய்கின்றமையே இவ்வாறு விண்கற்களை வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாக இருக்கின்றமைக்கு காரணம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக