இங்கிலாந்து நாட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் அடைந்த 3 வயது Sophie Firth என்ற சிறுமி, தன்னுடைய உடலில் தீப்பிடித்த காரணத்தால், படுகாயம் அடைந்து, உயிருக்கு 8 நாட்களாக போராடி, பின் பரிதாபமாக லண்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Sophie Firth என்ற 3 வயது குழந்தை நட்சத்திரம், Emmerdale என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் Angelica King on ITV soap என்ற வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவர் பல பாராட்டுக்களையும், பரிசுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில், விடுமுறை தினத்தில், தன் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையில் உடையில், கேஸ் அடுப்பின் தீ பட்டு, பின் உடல் முழுவதும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். எட்டு நாட்களாக மருத்துவர்கள் இரவு பகல் பாராது தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சைக்கு பலனளிக்காமல், இன்று காலை லண்டனில் மரணமடைந்தார்.
அவருடைய மரணச்செய்தி கேட்டு, Emmerdale படக்குழுவினர் நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவருடைய இழப்பு இங்கிலாந்து சினிமாத்துறைக்கு மட்டுமல்லாமல், ஹாலிவுட் திரைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக