புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைகளை, வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கியதில் 22 குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்திற்கு உட்பட்ட சென்பெங் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.



இன்று காலை வழக்கம் போல் மாணவ, மாணவிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக்கூடி நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் குழந்தைகளை கண்மூடித்தனமாக தாக்க தொடங்கினார்.

இதில் படுகாயமடைந்த 22 குழந்தைகள் ரத்தம் சொட்ட சொட்ட கதறி துடித்தனர். அதன்பின் காயமடைந்த குழந்தைகள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 2 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹெனான் நகர சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கத்தியுடன் இருந்த அந்த வாலிபரை, பள்ளி காவலாளிகள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top