புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 45 வயது முதியவரை
விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பெற்றோரை சிறுவன் தவற விட்டு விட்டார். பெற்றோரை தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்து இருக்கின்றார்.

பிரஸ்தாப முதியவர் சிறுவனை கண்டு கூடவே அழைத்துச் சென்று இருக்கின்றார். சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்தார். பின் ரயில் நிலைய மலசலகூடத்துக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்து இருக்கின்றார்.

இவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்கினர். எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போட நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் சிறுவனை மாகொல சிறுவர் இல்லத்துக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top