புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.யாழில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர், இவ்வாறு குறிப்பிட்டு்ள்ளார். இ
து குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் மூன்று பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் எம்மிடம் பதிவாகியுள்ளன. குறித்த சம்பவங்கள் யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.இச் சம்பவங்களில் 15 வயதிற்கும் 16 வயதிற்கும் இடைப்பட்ட சிறுமிகளே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேற்படி சம்பவங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நாம் சந்தேக நபர்களை கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததையடுத்து சந்தேக நபர்கள் நீதிமன்றத்தின் பணிப்புக்கு அமைவாக விளக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளனர் என மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top