புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜப்பானில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், 94 வயது முதியவர் முதன் முறையாக போட்டியிடுகிறார்.
ஜப்பானில் நாடாளுமன்ற கீழ்சபைக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் மனுத்தாக்கல் முடிய மூன்று மணிநேரமே இருந்த நிலையில், தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹான்யூ தேர்தல் அலுவலகத்திற்கு வந்த முதியவர் தனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

சுறுசுறுப்பாக காணப்பட்ட ரியோகிச்சி- கவாசிமா என்ற அந்த முதியவரின் வயது 94 ஆகும்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண், உண்மையை தான் சொல்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.

அதன்பின் அவர் தனது இறுதிக்காரியத்திற்காக சேர்த்து வைத்திருந்த 30 லட்சம் யென் பணத்தை எடுத்து வந்து கொடுத்தார்.

டோக்கியோ பெருநகர் விரிவாக்கத்தால் நெல்வயல் நிலங்கள் பாலாக்கப்படுவதாக கூறி ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக அங்கு அவர் நிற்கிறார்.

இத்தேர்தலில் சுதந்திர ஜனநாயகக் கட்சியான எதிர்கட்சியே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top