எலி மருந்தின் மூலம் மனைவியை கொலை செய்த கணவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பவேரியாவை சேர்ந்த தம்பதியினரின் மகன் புற்றுநோயால் காலமானார்.
இதனையடுத்து தன் மனைவியிடம், குழந்தை பெற்றுத்தருமாறு கணவர் வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு மனைவி மறுக்கவே, தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கும் மனைவி மறுத்த காரணத்தினால், அதிக கோபமடைந்த கணவர் எலி விஷத்தை உணவில் கலந்து கொடுத்து கொலை செய்து விட்டார்.
இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், கணவர் குற்றவாளி என தெரியவந்ததையடுத்து இவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக