இருப்பதும் ஓட்டேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஓட்டேரி எஸ்எஸ்.புரம் டி.பிளாக்கில் வசிப்பவர் சம்பத் (32), தனியார் நிறுவனத்தில் பணி. மனைவி தவமணி (28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள்.
இங்குள்ள ஏ பிளாக்கை சேர்ந்தவர் ராஜன். கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உண்டு. இவருடைய மனைவி அய்யம்மாள் (28). இவர்களுக்கும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தவமணியும் அய்யம்மாளும் நெருங்கிய தோழிகள். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வார்கள். இந்நிலையில், சம்பத்துக்கும் அய்யம்மாளுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது தெரியவந்ததும் கணவரை தவமணி கண்டித்தார். ஆனால் கள்ளக்காதல் தொடர்ந்தது.
கடந்த 22ம் தேதி திடீரென சம்பத்தும் அய்யம்மாளும் வீட்டில் இருந்து ஓடிவிட்டனர். இதுசம்பந்தமாக, தவமணியும் அய்யம்மாள் கணவர் ராஜனும் தலைமை செயலக காலனி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகான் வழக்கு பதிவுசெய்து விசாரித்தார். பின்னர் சம்பத், அய்யம்மாள் ஆகியோரிடம் போனில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். இருவரையும் காவல்நிலையத்துக்கு வர கேட்டு கொண்டனர். அதன்படி இருவரும் நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்துக்கு வந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென அடுத்தடுத்து அய்யம்மாளும் அதை தொடர்ந்து சம்பத்தும் மயங்கி விழுந்தனர். அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு இருவருக்கும் உடல்நலம் தேறியது. நேற்று காலை அவர்களிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
அப்போது சம்பத், ‘மனைவி தவமணியும் வேண்டும். காதலி அய்யம்மாளும் வேண்டும். இருவரும் இல்லாமல் உயிருடன் இருக்க மாட்டேன். இருவரையும் என்னுடன் சேர்த்து வைத்துவிடுங்கள். இருவரும் சகோதரிகளாக இருக்கட்டும்’ என்று போலீசாரிடம் கெஞ்சினார். ‘என் கணவர் எனக்கு மட்டும்தான். 2 குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். வேறு யாரும் சொந்தம் கொண்டாட கூடாது. கணவரிடம் இருந்து கள்ளக்காதலியை பிரிக்கவேண்டும்’ என தவமணி கதறினார்.
அப்போது, ‘கணவர் குடித்துவிட்டு வந்து தினமும் அடிப்பார். சம்பத்துடன்தான் வாழ்வேன். என்னிடம் இருந்து சம்பத்தை பிரித்துவிடாதீர்கள்’ என அய்யம்மாளும் கதறினார். மனைவி உயிருடன் இருக்கும்போது மற்றொரு திருமணம் செய்வது சட்டப்படி தவறாகும். சம்பத்தோ இரு மனைவிகளை வைத்து சமாளித்து கொள்கிறேன் என்கிறார். சம்பத்தின் மனைவியோ கணவர் எனக்கு தான் சொந்தம் என்கிறார். கள்ளக்காதலி அய்யம்மாவோ, குடிகார கணவனுடன் வாழ்ந்தது போதும். சம்பத்துடன் சேர்ந்து வாழவிடுங்கள் என்கிறார். அய்யம்மாள் கணவன் ராஜனோ, எது நடந்தாலும் நடக்கட்டும் என்கிறார். இதனால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகிறார்கள். இந்த சம்பவத்தால் ஓட்டேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக