இந்தியாவில் காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுப்பு! காதலியை கத்தியால் குத்திய காதலன்
காரைக்குடியில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் எம்.எஸ்.சி. பிசிக்ஸ் படித்து வருபவர் சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே கல்லூரியில் படித்து வருபவர் ரெனீஸ்
(வயது22). இவர் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணத்தை சேர்ந்தவர்.
இவர்கள் இருவரும் தனித்தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வந்தனர். ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்த சினேகாவும், ரெனீசும் சகஜமாக பழகினார்கள். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ரெனீசும், சினேகாவும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் சினேகா அவரது வீட்டில் பெற்றோர்கள் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். வேறு வழியில்லாமல் அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
சினேகா சம்மதத்துடன் மாப்பிள்ளை பார்க்கப்பட்டது. இந்த தகவல் ரெனீசுக்கு தெரியவந்ததும் சினேகாவிடம், “தன்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது” என்று வற்புறுத்தினார். ஆனால் சினேகா குடும்ப சூழ்நிலை, பெற்றோர்கள் நலன் ஆகியவற்றை எடுத்துக் கூறி தன்னை மறந்து விடும்படி ரெனீசிடம் கூறியுள்ளார். ஆனால் ரெனீசால் சினேகாவை மறக்க முடிய வில்லை.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிக்கு செல்வதற்காக சினேகா காரைக்குடி பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்து இறங்கினார். அப்போது அங்கு வந்த ரெனீஸ் சினேகாவை வழி மறித்து தன்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தினார். அதற்கு சினேகா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர் கத்தியை எடுத்து குத்தினார். இதில் சினேகாவின் கைகளில் சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது.
கைகளில் ரத்தம் வழிந்தோட சினேகா அலறியதும் பஸ் நிலையத்தில் கூடியிருந்தவர்கள் சுற்றி வளைத்து ரெனீசை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் சினேகாவை காரைக்குடி அரசு ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரெனீஸ் கைது செய்யப்பட்டார்.

0 கருத்து:
கருத்துரையிடுக