அதிகாலை வேளையில் வீடுகளை உடைத்து பொருட்களைத் திருடி வந்த 17 வயதுடைய யுவதியொருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை நவயாலதென்ன பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து
1,88,500 ரூபா பெருமதியுள்ள தங்க நகைகள் உட்பட இன்னும் பல பொருட்களை திருடிய சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி வீட்டில் திருடிய தங்க ஆபரணங்களை அடகுவைத்து பாதணிகள் உட்பட்ட பல அலங்காரப் பொருட்களை இவர் கொள்வனவு செய்திருந்ததாகவும் அவை தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதிக்கு மேலும்
நான்கு குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் தனியாகச் சென்றே வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை கண்டி பிரதான நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக