11 வயது சிறுமியை 70 வயது முதியவருக்கு விற்று விபச்சாரத்தில் ஈடுபடுத்திய, பிரிட்டிஷ் தம்பதியரைஸ்பெயின் போலீசார் கைது செய்துள்ளனர்.
5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து குடிபெயர்ந்து ஸ்பெயின் நாட்டில் வாழும் தம்பதியருக்கு 11 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இங்குள்ள உல்லாச தீவான மஜோர்காவுக்கு ஓய்வெடுக்க வரும் ஒரு 70 வயது முதியவருடன் தங்களின் 11 வயது மகளை வற்புறுத்தி அனுப்பி வைத்தனர். கடந்த 6 வருடங்களாக இந்த சம்பவம் நடந்து வருகிறது.
தங்கள் மகளை ஒவ்வொரு முறை அந்த முதியவரிடம் ஒப்படைக்கும் போதும் 20 டாலர்கள் வரை அந்த பெற்றோர் வாடகையாக வசூலித்து வந்துள்ளனர். தற்போது அந்த சிறுமிக்கு 16 வயது ஆகின்றது.
காசு கொடுத்து சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்வது, அந்த முதியவர் தங்கும் ஓய்வு விடுதியின் அருகில் வசிக்கும் சிலரால் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அந்த சிறுமியின் தாய், தந்தை, அந்த முதியவர் உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார், ஸ்பெயின் நாட்டில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
தவறான நோக்கத்துடன் சிறுமியை முதியவர் அழைத்துச் சென்றதாகவும், பாலியல் வன்முறைக்கு உடந்தையாக சிறுமியின் பெற்றோர் இருந்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக