புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு




ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மல்லாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யாகசாமி. இவரது மகள் விஜயலட்சுமி.இவருக்கும் வெங்கல் ரெட்டி என்ற வாலிபருக்கு காதல் ஏற்பட்டது.
வெங்கல்ரெட்டி வேறு சாதி என்பதால் காதலுக்கு விஜயலட்சுமி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி விஜய லட்சுமி வெங்கல்ரெட்டியை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் மகள் மீது வெறுப்பு கொண்ட விஜயலட்சுமி பெற்றோர் பின்னர் சமாதானம் அடைந்தனர். இந்த நிலையில் விஜயலட்சுமி கர்ப்பம் தரித்தாள்.

தனது பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்த அவளுக்கு 15 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.


குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் கணவர் குடும்பத்தினர் யாரும் வரக்கூடாது என்று விஜயலட்சுமி தாய் மற்றும் உறவினர்கள் கூறினார்கள். ஆனால் விஜயலட்சுமி இதனை ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.


இந்த நிலையில் நேற்று மதிய உணவுக்கு பிறகு விஜயலட்சுமி தாயும், அண்ணியும் குழந்தையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ படுத்து ஓய்வு எடு என்று கூறினார். விஜயலட்சுமி சற்று தூங்கினார். கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.


வீடு முழுக்க தேடினார். இறுதியில் அரிசி டிரம்மை திறந்தபோது அதில் குழந்தை பிணமாக கிடந்தது. வேறு சாதி வாலிபருக்கு பிறந்ததால் தனது குழந்தையை தாய் மற்றும் உறவினர்கள் கொன்றுவிட்டதாக விஜயலட்சுமி போலீசில் புகார் செய்தார். போலீசார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top