புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வவுனியா, சிவபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வவுனியா, சிவபுரம் 4ம் கட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து அன்பழகன் புளோஜினி ( 14 வயது)நேற்று காலை தான் கல்வி பயிலும் பாடசாலையான அல்பா நகர் வித்தியாலயத்திற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், பாடசாலை முடிந்து வெகுநேரமாகியும் குறித்த சிறுமி வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரை தேடியபோது, பாடசாலைக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top