புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தன்னை பார்த்து குரைத்து கொண்டிருந்த நாயை, கோபத்தில் கடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் இலவாரா பகுதியில் பொலிசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


அப்போது 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தார்.இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக பொலிசார் அருகில் அழைத்தனர்.

இந்நிலையில் இவரை பார்த்து டெக்ஸ்டர் என்ற நாய் குரைத்து கொண்டே இருந்ததால், கடும் கோபமடைந்தார்.

தொடர்ந்து ஆவேசமாக குரைத்த அந்த நாயை நோக்கி பாய்ந்து கடித்தார், நாயும் வாலிபர் மீது கோபமாக பாய்ந்தது.

நாயை கடித்த குற்றத்துக்காக பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top