ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுடன் நடித்த ஜீவா தற்போது அவருடைய இளைய மகள் துளசியுடன் நடிக்கவிருக்கிறார். தெலுங்கு, மலையாளத்தில் தோல்விப் படங்களில் நடித்த கார்த்திகாவுக்கு தமிழில் ஜீவாவின் ஜோடியாக கோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரும்
இயக்குனர் கூறியபடி சமத்தாக நடித்துக் கொடுத்தார். படமும் ஹிட்டானது. இது தான் கார்த்திகாவின் முதல் ஹிட் படம். அப்பாடா ஒரு வகையா தோல்வி நடிகை என்ற பெயர் போச்சு என்று அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார். இந்நிலையில் கார்த்திகாவின் தங்கை துளசி கடல் படத்தில் நடித்து முடித்த கையோடு ஜீவாவோடு யான் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரவி கே. சந்திரன் இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஜீவா ஏற்கனவே ஹைதராபாத் சென்றுவிட்டார். இந்த வாரம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளை படமாக்குகிறோம் ஜீவா, அதனால் கடினமாக உழைக்கத் தயாராக இருங்கள் என்று இயக்குனர் ஹீரோவிடம் தெரிவித்துள்ளார். நீ எடுங்க சார், ஜமாய்ச்சிடலாம் என்று ஜீவா கூறியுள்ளார். யான் படத்தை ஆர்.எஸ். இன்போடெய்ன்மென்ட் தயாரிக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்த நீ தானே என் பொன்வசந்தம் கடந்த 14ம் தேதி தான் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக