பாலிவுட்டில் நடிக்கும் ஆசையெல்லாம் தற்போதைக்கு கிடையாது என்று நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கூறியிருக்கிறார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், படித்துக்கொண்டிருக்கும் போது என்னால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை.
ஒவ்வொரு வாரமும் எனது கெரியர் பற்றிய முடிவை மாற்றிக் கொண்டே இருக்கிறேன்.
சில நேரம் உளவாளியாக, எழுத்தாளராக விரும்புகிறேன், அதனால் எனக்கு நிஜமாகவே தெரியவில்லை என்றார்.
தன் மகள் பற்றி ஸ்ரீதேவி கூறுகையில், எனது மகள்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன்.
எதைச் செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் கூறுவதுண்டு.
முதலில் அவர்கள் படிப்பை முடிக்க வேண்டும் என்றார்.
சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் ஸ்ரீதேவியால் படிக்க முடியவில்லை.
அதனால் தான் தனது மகள்களை படிக்க வைப்பதில் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக