பாலிவுட்டில் பெரிய நடிகையாக வரவேண்டுமென்ற ஆசையெல்லாம் தனக்கில்லை என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா, கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தார்.
இதையடுத்தே நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்தார்.
இப்படம் தெலுங்கில் எட்டோ வெள்ளிப்போயிந்தி மனசு என்ற பெயரிலும் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
எனவே பாலிவுட் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, தனக்கு கதையே முக்கியம் என்றும் கதாப்பாத்திரத்தை தெரிவு செய்த பின்னரே நடிக்க முடிவு செய்வேன் என கூறினார்.
இலியானா, தமன்னா பாலிவுட்டில் நுழைந்தது பற்றி கேட்டதற்கு, அவர்கள் இருவரும் மும்பைவாசிகள்.
எனவே அங்கு பெரிய நடிகையாகவேண்டுமென்று நினைக்கிறார்கள்.
ஆனால் நான் சென்னைவாசி என்பதால் தென்னிந்திய மொழிகளில் பெரிய நடிகையாகவேண்டுமென்ற ஆசை இருக்கிறது என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக