புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெற்றோர் பணம் தராத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறிய வாதுவையைச் சேர்ந்த சிறுமியொருவர் களுத்துறையில் வைத்து வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

வாதுவைப்பகுதியில் வசிக்கும் தரம் 8 இல் கல்வி கற்கும் சிறுமியொருவர் தனது பெற்றோர் பணம் தராத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குறித்த சிறுமி இதற்கு முன்னரும் பலதடவைகள் பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுள்ள போதிலும் பின்னர் வீடு திரும்பியுள்ள காரணத்தில் பெற்றோர் இதனை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி நீண்டநாட்களாக திரும்பி வராத காரணத்தினால் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் மாத்தறை பகுதியில் சிறுமியொருவர் அலைந்து திரிவதாக பொலிஸாருக்குக் தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் அச்சிறுமியை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சிறுமி தனக்கு நேர்ந்தவற்றை பொலிஸாருக்கு தெரிவிக்கையில்,
தான் வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு களுத்துறைக்குச் சென்று அங்கு வீதியில் அலைந்து திரிந்துள்ளார். இதன்போது அங்கு வந்த வேன் சாரதியொருவர் அவருடன் அன்பாகப் பேசி நகரிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கு வைத்து அச்சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார் அதனைத்தொடர்ந்து தான் கர்ப்பமாகி விடக்கூடும் என்று சிறுமி பயத்தில் அழுதுள்ளார்.
சிறிமிக்கு ஆறுதல் கூறியுள்ள அவர் மருந்தகமொன்றுக்கு அழைத்துச் சென்று கர்ப்பத்தடை மாத்திரைகளை சிறுமிக்கு வாங்கிக்கொடுத்துள்ளார்.
இதன்பின்பும் தன்னுடன் வந்து தங்குமாறு சிறுமியை அவர் அழைத்துள்ளார் ஆனால் சிறுமி அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதுடன் தன்னை மாத்தறைக்குச் செல்லும் பஸ்ஸொன்றில் ஏற்றிவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து மாத்தறைக்கு சென்று அங்கு தனது நண்பியொருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
எனினும் அங்கு யாரும் இல்லாததாலும் செய்வதற்கு வேறு எதுவும் இல்லாத காரணத்தினாலும் வீதியில் அலைந்து திரிந்துள்ளார். இதனையடுத்தே பொலிஸார் அவரை மீட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top