புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மேய்ச்சலுக்காக சென்ற மாடுகளை தேடிச்சென்ற இருவர் வெள்ளத்தில் சிக்குண்டு பலியாகியுள்ள சம்பவம் ஒன்று மாவடியோடையில் இடம்பெற்றுள்ளது.

மாவடியோடை சப்பாத்துப் பாலத்தில் வைத்து இருவரும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் வெள்ளத்தில் சிக்குண்டு அடித்;து செல்லப்பட்டுள்ளனர்.

காணாமல் போன மாடுகளைத் தேடுவதற்காக மாவடி ஓடைக்குச் சென்று விட்டு திரும்பி வரும் வழியில் சப்பாத்து பாலத்தில் வைத்தே  இவ்விருவரும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கடற்படையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வெள்ளத்தினால் சூழப்பட்ட பகுதிகளில் தேடுதல் நடத்திய போதும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டவர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இரவாகி விட்டதனால் தேடுதல் நடவடிக்கைகளும் கைவிடப்பட்டது.

பாரிய வெள்ளத்தில் சிக்குண்ட இருவரும் இனிமேல் உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனத்தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மயில் வாகனம் ராகுலன் (35 வயது) பாலகப் போடி பத்மநாதன் (34 வயது) ஆகிய இருவருமே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top