புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழிலொன்றில், மும்பாயிலுள்ள கிராண்ட் மருத்துவ கல்லூரியின் வைத்தியர்கள் தாம் கண்டறிந்த புற்றுநோய் வகையொன்று குறித்து தெரிவித்துள்ளனர். அப்புற்றுநோயை 'சாறி புற்றுநோய்' என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் 3 பெண்களுக்கு இடைப் புற்றுநோய் அல்லது சாறி புற்றுநோய்க்காக மருத்துவ சிகிச்சையளித்துள்ளோம்' என வைத்தியர் ஜி.டி பாக்ஷி தெரிவித்துள்ளார்.  இவர்களில் இரு பெண்கள் கடந்த இருவடங்களுக்கு முன்பாக மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.


'அப்பெண்களில் 3 ஆவது பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இவ்வாறான நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவருமே 40 வயதிற்குட்பட்டவர்கள்.
இடுப்பில் ஒரே இடத்தில் சேலைக்கான பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டும்போது அது நாளாடைவில் எரிச்சிலை ஏற்படுத்தக் கூடும்.  இது நிலையான எரிச்சல் அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதிகமான சேலை கட்டும் பெண்கள் நீண்டகால நோயாக மாறும்வரை அதை அவதானிப்பதில்லை' என்று வைத்தியர் பாக்ஷி தெரிவித்துள்ளார்.


டாக்டர் அசோக் டி பொரைஸா மற்றும் டாக்டர் முகுந்த் பீ. டயேட் ஆகியோருடன் இணைந்து அவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
பெண்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இடை தழும்புகள் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது.  இதுவே இந்த 3 பெண்களுக்கும் சிகிச்சையை பெறுவதற்கு காரணமாக அமைந்தது' என அவர் தெரிவித்துள்ளார்.
சேலை கட்டும் பெண்கள் இடைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாத வண்ணம் உள்பாவாடையின் நாடாவை இறுக்கமில்லாமல் கட்டவேண்டும். அல்லது அதற்கு வழக்கமான கயிறுபோன்ற நாடாவுக்கு பதிலாக அகலமான பட்டியின் மூலம் அழுத்தத்தை குறைக்கலாம்  என டாக்டர் பாக்ஷி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வகையான புற்றுநோய்களானது காற்சட்டைகள் மற்றும் இடைப்பட்டிகளினால் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவற்றின் மூலமான அழுத்தம்  ஒரே இடத்தில் இல்லாமல் பரவலாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
'இந்நோயிக்கான சிகிச்சையானது அதனை கண்டறியும் பருவத்தில் தங்கியுள்ளது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் அதனை சீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் இது நிணநீர் பகுதி முழுதும் பரந்துவிட்டால் எமக்கு அதனை வேகமாக பரவுவதற்கு முன் அகற்ற வேண்டிய தேவையேற்படும்' என அவர் கூறினார்.

சென்னையை தளமாகக் கொண்டு இயங்குபவரான தோல் நோய் மருத்துவர் வைத்தியர் மாயா வேதமூர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில், 'சேலை அணியும் பெண்களில் 3 வீதமானோர் தோல் எரிச்சலுக்காக சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வருகின்றனர். ஆனால் இந்த எரிச்சல் நோயாக மாறியதை நான் கண்டறிந்ததில்லை. அப்பெண்களுக்கு பாவாடை நாடாவை மென்மையாக கட்டவேண்டும்.  அல்லது ஒரு அகலமான பட்டியை அணிய வேண்டும் என நான் அறிவுறுத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top