நாட்டின் பல பாகங்களிலும் சிகப்பு மழை மற்றும் மீன் மழை பெய்துள்ளது மட்டுமன்றி வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் பூமியை நோக்கி விழுந்துள்ள நிலையில் இந்தியாவில் மஞ்சள் மழை பெய்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புதுவிருத்த கிரிகுப்பம் கிராமத்திலேயே மஞ்சள் மழை பெய்துள்ளது. அங்கு வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்டது.
திடீரென மஞ்சள் நிறத்தில் மழைத்தூறல் நேற்று விழ ஆரம்பித்தது. இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து,மழைத்தூறலை கைகளால் துடைத்தபோது மஞ்சள் நிறத்தில் மாவு போன்று காணப்பட்டது. இதனால் அச்சமடைந்த சிலர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
மஞ்சள் தூறல் இரண்டு நிமிடம் வரை நீடித்தது. மஞ்சளாக பெய்தது அமில மழை என தகவல் பரவியதைத் தொடர்ந்து, கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது
0 கருத்து:
கருத்துரையிடுக