புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வெள்ளைக்கார காதலியை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த மருத்துவர் மது ஹொன்னய்யா(வயது 33), மயக்கவியல் நிபுணர் ஆவார்.


இவர் பிரித்தானியாவில் லிவர்பூல் மருத்துவமனையில் கடந்த 2008ம் ஆண்டு பணிபுரிந்த போது, உடன் பணிபுரிந்த மருத்துவர் எம்மா ரைட்டன்(வயது 32), என்ற வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்தார்.

இதற்கிடையில் அவுஸ்திரேலியாவில் வேலை கிடைத்து எம்மா சென்று விட்டார். எனினும் இருவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்தனர்.

சில மாதங்கள் கழித்து எம்மா, பிரித்தானியாவிற்கே வந்துவிட்டார். பின்னர் இருவரும் கடந்த 2010ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இந்த விடயத்தை பெற்றோரிடம் மது தெரிவிக்காத நிலையில் மகனை பார்க்க பெற்றோர் பிரித்தானியா வந்தனர்.

அப்போது, மகன் வெள்ளைக்கார பெண்ணை காதலிப்பதும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததும் தெரிந்ததையடுத்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், தங்கள் ஜாதியில் அல்லது பிறந்து வளர்ந்த பெங்களூரில் இருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மகனிடம் வலியுறுத்தினர்.

பெற்றோரை சமாதானப்படுத்த மது எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கடைசியாக எம்மாவை இந்து மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து கொள்கிறேன் என்று மது கூறினார்.

இதுகுறித்து காதலியிடம் பேசியபோது அவர், இந்து மதத்துக்கு மாற மறுத்துவிட்டார்.

இதையடுத்து இருவரும் பிரிந்தனர். இதனால் சோகம் அடைந்த மது, ஸ்வான்சீயில் உள்ள சிங்கிள்டான் மருத்துவமனைக்கு மாறினார்.

கடந்த 7 மாதங்களாக மிகவும் மனம் நொறுங்கிய நிலையில் இருந்த மது, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இதுகுறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

எனினும் மது எப்போது தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top