யாழில் நாய்க்கடிக்கு இலக்காகிய 30 பேர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவு புள்ளிவிபரத் தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் வரையிலான 30 பேர் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் நாய் கடிக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதேவேளை,கட்டாக்காலி மற்றும் வளர்ப்பு நாய்களின் கடிக்கு இலக்காகியவர்கள் தாமதிக்காது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வேண்டுகொள் விடுத்தள்ளனர்.
இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 பேர் நாய்க்கடிக்கு இலக்காகி மரணித்துள்ளனர்
0 கருத்து:
கருத்துரையிடுக