லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றவர் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்.
சில்வர் லினிங்ஸ் படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்தநிலையில், சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதும், மிக உற்சாகமாகவும், மகிழ்ச்சியோடும் எழுந்து வந்த ஜெனிபர் லாரன்ஸ் படிக்கட்டுகளில் ஏறும் போது கால் தடுக்கி விழுந்தார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் படிக்கட்டுகளை ஊன்றிக் கொண்டு எழுந்தார்.
தடுக்கி விழுந்ததால் வெட்கமடைந்த ஜெனிபர், சிரித்துக் கொண்டே மேடைக்கு வந்து, நான் விருது வாங்கும் போது அனைவரும் எழுந்து நிற்கிறீர்கள். எனக்கு சந்தோஷமாக உள்ளது என்றார்
அவர் விழும் போது பதற்றத்தில் அனைவரும் எழுந்து நின்ற விதத்தைப் பார்த்து நகைச்சுவையாகவே அவர் இதனைக் கூறினார்.
இவர் இவ்வாறு விழுந்ததற்கு அவர் உடுத்திக் கொண்டு வந்த ஆடையே காரணம் என்று கூறப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக