மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை பாலர் இல்ல விடுதியில் தங்கியிருந்த 31 மாணவர்கள், பல்லி விழுந்த உணவை உண்டதன் காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதியில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை 50 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
வார்டன் சின்னச்சாமி மேற்பார்வையில் நேற்று முன்தினம் இரவு வைத்த புளிக் குழம்பை, நேற்று காலை, மாணவர்கள் சாப்பிட்டனர்.
கடைசியாக சாப்பிட்ட மாணவனின் தட்டில், குழம்புடன் இறந்த பல்லி இருந்தது.
இதைப் பார்த்த, 31 மாணவர்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
நாகமலை ஆரம்ப சுகாதார மையத்தில், 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 11 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது, மாணவர்கள் பாதிப்பின்றி நலமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக