புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


18 வயது பாடசாலை மாணவியொருவர் விளையாட்டுப் போட்டியொன்றில் கலந்து கொண்ட போது மாரடைப்பினால் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

மாவனல்ல ரிவிசந்த கல்லூரியின் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

18 வயதான ஹசனி அனுஸா என்ற மாணவி 5,000 மீற்றர் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போது இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மைதானத்தில் மயங்கி விழுந்த இந்த மாணவி மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மூன்று மாணவ மாணவியர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top