புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை இளைஞன் ஒருவர்
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்று மிகோரி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 20 வயதான மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே 21 வயதான இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்ட அன்று குறித்த இளைஞன் மிகோரி பல்கலைக்கழக விடுதில் இருக்கவில்லை என குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாணவர் விடுதியில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மாணவி, தான் தனது அறையில் நித்திரையில் இருந்தவேளை கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் குறித்த நபர் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்பிரவேசித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (26) இலங்கை நேரப்படி 10.15 மணியளவில் சிட்னி ரயில்வே சதுக்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top