கோவையில் 2 தெரு நாய் மற்றும் 7 கோழிகளைக் கொன்று அவற்றின் ரத்தத்தை குடித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கோவை மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது மனைவி ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர்களுக்கு 4 வயது பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் ராணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் முக்கி கொலை செய்ய முன்றுள்ளார் ராணி.
இதைப் பார்த்த ராஜு ஓடி வந்து குழந்தை பறித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த ஒரு சில நிமிடங்களில் ராணி தனது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதை தடுத்த கணவரைப் பார்த்து எனக்கு ரத்தம் வேண்டும் என்று அவர் அலறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை வீட்டுக்கு அருகே சுற்றிய ஒரு தெரு நாயைப் பிடித்துக் கொன்று அதன் ரத்தத்தை குடித்துள்ளார். இதையடுத்து ராஜு தனது மனைவிக்கு வைத்தியம் செய்ய அவரை பொள்ளாச்சி அம்பராம்பாளையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் ரத்தம் கேட்ட ராணி தெருவில் சென்ற நாயைக் கொன்று ரத்தம் குடித்துள்ளார்.
அதன் பிறகு மேலும் ரத்தம் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்த 7 கோழிகளின் தலையைக் கடித்து அவற்றின் ரத்தத்தை குடித்துள்ளார். ராணியின் செயல்களால் அவரது குடும்பத்தினர் பீதியடைந்து அவரை கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்த்தனர்.
மனநல பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவர் தொடர்ந்து ரத்தம் கேட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக