புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பெருங்குளம் ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் மகாராஜன்(49). இவரது மனைவி ஆவுடையாச்சி(45). இவர்களது இளைய மகன் கொத்தாளமுத்து (19).
கட்டிட தொழிலாளி. மகாராஜன், தான் சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழித்துள்ளார்.

குடிக்க பணம் இல்லாத நேரங்களில் மனைவி, மகனிடம் கேட்டு அவர்களை அடித்து உதைத்துள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

அவருக்கு மனைவி ஆவுடையாச்சி சாப்பாடு போட்டு கொடுத்துள்ளார். ஆனால் அதை சாப்பிடாமல் மகனிடம், மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவரை கொத்தாளமுத்து கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன் மகனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இனியும் இவரை விட்டு வைத்தால் தாய்க்கும், தனக்கும் ஆபத்து என்று நினைத்து ஆத்திரமடைந்த கொத்தாளமுத்து வீட்டில் கிடந்த அரிவாளால் தந்தையின் கழுத்தில் வெட்டினார்.

அவர் நிலைகுலைந்து சரிந்து விழுந்ததும் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்துள்ளார். இதில் மகாராஜன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

தகவலறிந்த ஏரல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மகாராஜன் உடலை கைப்பற்றி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொத்தாளமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top