புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பெங்களூர்-புனே அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி கிறிஸ் கெய்ல் அதிரடி ஆட்டத்தால் 130 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணி ராயல்
சேலஞ்சர்ஸ் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ்  நிர்ணயிக்கப்ட்ட 20 ஓவரில் 263 ரன்களை குவித்தது. ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடி 66 பந்துகளில் 175 ரன்களை குவித்தார். ஐ.பி.எல் வரலாற்றில் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இன்றைய ஆட்டத்தில் மட்டும் கெய்ல் 17 சிக்சர்களை அடித்து சாதனை படைத்துள்ளார். புனே அணியின் பந்து வீச்சை ஈவு இரக்கமின்றி எல்லா திசைகளிலும் சிதறடித்தார். புனே அணியில் 5வது ஓவர் வீசிய மார்ஷ் ஓவரில் 28 ரன்களும், 8வது ஓவர் வீசிய பின்ஞ் ஓவரில் 29 ரன்களும் கெய்ல் அடித்து அசத்தினார். கெய்ல் சிக்சர் மழை பொழிந்ததால் புனே வீரர்களுக்கு பீல்டிங் செய்வது மிச்சம் ஆயிற்று. இதனையடுத்து 264 ரன்கள் என்றும் இமாலய இலக்கை அடைய ஆட்டத்தை துவக்கிய புனே வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

நேரடி ஒளிபரப்பு

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top