எதார்த்தமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இயக்குநர் சேரன், நாயகனாவும் வெற்றி பெற்றவர். தற்போது இயக்குநராக வேறு ஒரு பரிணாமத்தில் தன்னை நிலை நிறுத்துக்கொள்ள நினைத்த சேரன், அதற்காக கமர்ஷியல் ஃபார்முலா அவதாராம் எடுத்துள்ளார்.
இயக்கம் மற்றும் நடிப்பு, இல்லாவிட்டால் நடிப்பு என்று கொஞ்ச ஆண்டுகளாக வலம் வந்த சேரன், தற்போது முழுக்க முழுக்க இயக்குநராகவே செயல்படும் படம் தான் 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை'. இப்படத்தின் ஷரவாணந்த் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக நித்யா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சந்தானம், கிட்டி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சேரன், "பாண்டவர் பூமி படத்திற்குப் பிறகு இயக்குநராக மட்டும் நான் செயல்படும் படம் இது. கிராமத்து படங்களை இயக்கும் இயக்குநர்களை எப்போதும் குறைவாகவே இங்கு பார்க்கிறார்கள்.
என்னதான் வெற்றி படம் கொடுத்தாளும், கிராமத்து படம் இயக்குபவர்களுக்கு எந்த முன்னணி ஹீரோவும் கால்ஷீட் கொடுப்பதில்லை. அதேபோல, தோல்விகளை கொடுத்தாலும் இங்கு யாரும் கிட்டே வருவதில்லை. சது சரியான ஒன்றுதான் என்பதை புரிந்துகொண்ட நான், என்னை வேறு ஒரு தளத்தில் காட்ட நினைத்தே இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.
இதுவரைப் பார்த்த சேரன் படத்திற்கும், இந்த படத்திற்கும் பெரும் வித்தியாசம் இருக்கும். படம் முழுவதும் முழுக்க முழுக்க இளைஞர்கள் பட்டாளமும், புத்தம் புதிய விஷயமும் தான் இருக்கும். ரொம்ப கமர்ஷியாக ஒரு விஷயத்தை ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
அதற்காகவே இந்த படத்தில் சந்தானத்தை நடிகக் வைத்துள்ளேன். அதே சமயம் கமர்ஷியலாக இருந்தாலும் இந்த படத்தில் ஒரு நல்ல விஷயத்தையும் சொல்லியிருக்கிறேன். அது இளைஞர்களுக்கு தூண்டுதலாக இருக்கும்." என்று தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக