காட்டாரில் நாட்டில் இஸ்லாமியர்கள் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு சில ஹோட்டல்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அங்கு வசிக்கும் பிற மதத்தினர் அனுமதி பெற்ற பின்னர் தான் இஸ்லாமியர்கள் மதுவை அருந்த வேண்டும். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்து கத்தாரில் தங்கி முடி திருத்துபவராக பணிபுரிந்து வரும் இஸ்லாமியர் ஒருவர் மது அருந்திவிட்டு, தன்னுடைய வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிசார் அவர் கடையில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 100 யுரோக்கள் அபராதம் விதித்துள்ளது. மேலும் அவருக்கு 40 சவுக்கடிகள் வழங்கவும் உத்தரவிட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக