திருகோணமலையில் மஜாச் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று மக்களினால் முற்றுகையிடப்பட்டு, நிலையத்தின் முகாமையாளர் மற்றும் வாடிக்கையாளர் நையப்புடைக்கப்பட்ட
சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அலஸ்தோட்டம் பகுதியில் மஜாச் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபச்சார விடுதியே அப்பிரதேச மக்களால் இன்று முற்றுகையிடப்பட்டது.
பின்னர், அவ்விடுதியை நடத்திய முகாமையாளர் மற்றும் அங்கு வந்திருந்த வாடிக்கையார் ஒருவர் ஆகியோர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அத்துடன், விடுதியிலிருந்த இரண்டு யுவதிகள் விசாரணைக்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மயங்கிய நிலையிலிருந்த மற்றுமொரு யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணகைளை மேற்கொண்டு வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக