கொடிய விஷம் கொண்ட காரில் கடத்தப்பட்ட 53 ராஜநாகங்கள் வியட்நாமில் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ராஜ நாகங்கள் 5.5 மீட்டர் நீளம் வளரக்கூடியவை.
அதிக விஷம் உள்ள இந்த பாம்புகளை வியட்நாம் நாட்டினர் இறைச்சிக்காகவும், மருத்துவத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
கடந்த வாரம் தலைநகர் ஹனோய் அருகே, சென்ற காரை பொலிசார் சோதனையிட்ட போது, அதில் 53 ராஜநாகங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். ராஜநாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக