புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கேரளாவில் லொட்டரி சீட்டு மூலம் கோடி ரூபாய் பரிசு வென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் அருகே பாலா என்ற ஊரில் பெற்றோருடன் வசித்து வருகிறார் உண்ணி(வயது 24).

கூலித்தொழில் செய்து வரும் உண்ணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தனது ஏழ்மையைப் போக்க அதிர்ஷ்டத்தை நம்பினார் உண்ணி. அதற்கு ஒரே வழி லாட்டரிச்சீட்டுதான் என்று நம்பி வருடக்கணக்கில் கட்டு கட்டாக வாங்கினார்.

சமீபத்தில் கேரள அரசு லாட்டரியான காருண்யா பாக்யஸ்ரீ என்ற லாட்டரி மூலம் உண்ணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

முதல் பரிசான ரூ1. கோடி உண்ணிக்கு கிடைத்த உடன் பெற்றோரிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்தார்.

வங்கிக் கணக்கில் பணம் பரிசு பணத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியவருக்கு ஒரு கோடி ரூபாய் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்தது.

வங்கியில் இருந்து பணத்தை எடுக்கப் போகும் முன்பாக அருகில் உள்ள வாய்க்காலில் குளிக்கப் போனார் உண்ணி. ஆனால் பரிதாபம், எதிர்பாராமல் உயிரிழந்து விட்டார்.

நீண்ட நேரமாகியும் உண்ணி வீடு திரும்பாத காரணத்தால் அவரை தேடி பெற்றோர்களும், உறவினர்கள் அங்கு சென்றனர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வாய்க்காலில் உண்ணி பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்த உண்ணியின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top