தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர் பாடகி ஜானகி.
பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்ற இவர் இன்று தனது 74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் 1938 ஏப்ரல் 23 ம் திகதி பிறந்த இவர் சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார்.
நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார்.
1957ம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும்.
அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார்.
1992ம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.
இவர் பெற்ற விருதுகள்
1986 இல் தமிழ்நாடு அரசின் கலை மாமணி விருது
2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது
1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
14 முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
7 தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
10 ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
தேசிய விருதுகள்
நான்கு தடவைகள் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுகள் கிடைத்தன.
1976, பதினாறு வயதினிலே படத்தில் செந்தூரப் பூவே பாடல்
1980, ஒப்போல் மலையாளத் திரைப்படத்தில் எட்டுமனூரம்பழத்தில் பாடல்
1984, சித்தாரா தெலுங்குப் படத்தில் வென்னெல்லோ கோடாரி அந்தம் பாடல்
1992, தேவர் மகன் படத்தில், இஞ்சி இடுப்பழகா பாடல்
0 கருத்து:
கருத்துரையிடுக