புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-மத்திய பிரதேசம், கன்சூரை சேர்ந்த, ஐந்து வயது சிறுமி, சில தினங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த, 35 வயதான பெரோஸ் கான் என்பவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.


மோசமான நிலையில், முதலில், ஜபல்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பின் நாக்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியின் உடல்நிலை மிக மோசமடைந்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

சிறுமியின் மூளை, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டுள்ளதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top