புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரஜினி நடித்துள்ள அனிமேஷன் படம் கோச்சடையான். சவுந்தர்யா இயக்கியுள்ள இப்படத்தில் கோச்சடையான், பாணா என்ற இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் ரஜினி.


அப்பா மகன் என நடித்துள்ள அவரது இளமையான கெட்டப்புக்காக நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்களாம். ஆரம்ப கால ரஜினியைப்போலவே அவர் மிகவும் துடிப்பாக இருப்பாராம். இதில் படைத்தளபதியாக வரும் கோச்சடையானுக்கு நன்றாக பரதம் ஆடவும் தெரியுமாம்.

அதனால் அவர் பரதம் ஆடுவது போன்ற காட்சிகளும் படத்தில் உள்ளதாம். மேலும், தற்போது இறுதிகட்டப்பணிகள் நடந்து வரும் அப்படத்தை ஜூன் மாதத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.

ஆங்கிலத்தில் வெளியான அவதார், டின் டின் படங்களைப்போன்று அனிமேஷன் படமாக உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் பட்ஜெட் தற்போது ஏற்கனவே திட்டமிட்ட 100 கோடியையும் தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top