புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா -மதுரை மாவட்டம், திருமங்கலம் பிரதேசத்தில் நபரொருவர் இறந்து விட்டதாக மயானத்திற்குக் கொண்டு சென்று இறுதிச் சடங்குகளைச் செய்தவேளை உயிருடன் எழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டை சேர்ந்தவர் அசோகன் (வயது 45) என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அசோகன் நேற்று மதியம் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இறந்வரின் உடல் ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் உறவினர்கள், கட்சியினர் கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலை தகனம் செய்வதற்கு முன்பு அசோகனின் உடல் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது அவரது உடல் அசைந்தது. சிறிது நேரத்தில் அவர் எழுந்து அமர்ந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அவரது மனைவி கணவர் உயிரோடு தான் இருக்கிறார் என்று மிகவும் சந்தோஷப்பட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். இதையடுத்து உறவினர்கள் உயிருடன் எழுந்த நபரை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இறந்து விட்டதாக தெரிவித்து, மயானத்திற்கு கொண்டு சென்ற நபர், உயிரோடு எழுந்து உட்கார்ந்த அதிசயம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top