புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட் 32-வது லீக் -இன்று இரவு 8 மணிக்கு பெரோஷாகோட்லாவில் நடை பெறும் ஆட்டத்தில் டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்து மீள வழி தெரியாமல் தவித்த டெல்லி
அணி கடைசி ஆட்டத்தில் வலிமையான மும்பையை வீழ்த்தி மிரட்டியது. சேவக் அந்த ஆட்டத்தில் 95 ரன் விளாசி மிரட்டினார். அவர் அதிரடி பார்மிற்கு திரும்பியிருப்பது அணிக்கு புதுத்தெம்பை கொடுத்துள்ளது. இன்றும் அவர் அதிரடியில் மிரட்டக்கூடும். வார்னர், ஜெயவர்த்தனே, கேதார் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் வலுசேர்த்தால் வெற்றி சாத்தியப்படும்.

பஞ்சாப் அணி 6 ஆட்டத்தில் தலா 3 வெற்றி, 3 தோல்விகளை சந்தித்துள்ளது. கேப்டன் கில்கிறிஸ்ட் பேட்டிங்கே மறந்துவிட்டது போல ஆடுகிறார். மந்தீப்சிங், மில்லர் ரன்குவிக்க தொடங்கியிருப்பது வலுசேர்க்கிறது. வோரா, வல்தாட்டி, ஹசி ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுத்தால் நெருக்கடிகொடுக்கலாம். இன்றைய ஆட்டத்தில் அசார்முகமது நீக்கப்பட வாய்ப்புள்ளது.

நேரடி ஒளிபரப்பு

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top